1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2025 (14:53 IST)

குஷ்பூ கைது! ஆடுகளோடு அடைக்கப்பட்ட பாஜகவினர்! - மதுரையில் பரபரப்பு!

BJP

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக பேரணி நடத்திய பாஜக மகளிரணியை சேர்ந்தவர்களை கைது செய்து ஆட்டுக் கொட்டகைக்கு அருகில் அடைத்து வைத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நீதிக்கேட்டு மதுரையை எரித்த கண்ணகியை நினைவுப்படுத்தும் விதமாக மகளிரணியினர் கையில் சிலம்பை ஏந்தி பேரணியில் சென்றனர். 
 

 

இந்நிலையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ உள்ளிட்ட பாஜக மகளிரணியினரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு வியாபாரத்திற்காக அருகிலேயே 200க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்துள்ளனர்.

 

ஆடுகளின் துர்நாற்றம் வீசுவதாகவும், தங்களை வேண்டுமென்றே இப்பகுதியில் அடைத்து வைத்துள்ளதாகவும் பாஜக மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Edit by Prasanth.K