தொடர்புடைய செய்திகள்
- வேளாண் கல்லூரி மாணவர்கள் ஈஷா விவசாய பண்ணைக்கு வருகை!
- நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் மனு: திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி..!
- திருமணமான இரண்டு நாளில் புதுமணத் தம்பதியர் தற்கொலை
- அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன்: பட்ஜெட்டில் ரூ.3600 கோடி ஒதுக்கீடு..!
- ரூ.800 கோடி மோசடி செய்த நிதி நிறுவனர் தற்கொலை: மரணத்தில் சந்தேகம் என தகவல்..!
நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவன் தற்கொலை: மன அழுத்தம் காரணமா?
நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் அபிஷேக். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த அபிஷேக் திடீரென மின்விசிறிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய கடிதத்தில் தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் படிப்பால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் பெற்றோர் தன்னை மன்னிக்கும்படியும் கூறியிருந்தார்.
இந்த தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
