செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 23 ஜனவரி 2023 (10:30 IST)

திருவிழாவில் கவிழ்ந்த கிரேன்; 3 பேர் பலி! – அரக்கோணத்தில் அசம்பாவிதம்!

Accident
அரக்கோணத்தில் நடந்த திருவிழா ஒன்றில் கிரேன் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோண நெமிலியில் உள்ள கீழவீதி கிராமத்தின் மண்டியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றபோது துரதிர்ஷடவசமாக கிரேன் சநித்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோலகலமாக தொடங்கிய திருவிழா உயிர்பலியில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit By Prasanth.K