ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (17:58 IST)

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

indigo
இண்டிகோ விமானங்களில் முதல் முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை இன்று முதல் தொடங்க இருப்பதாகவும், பிசினஸ் கிளாஸ் உடன் கூடிய விமானம் இன்று டெல்லியில் இருந்து கிளம்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, இன்று பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தினமும் 2200 விமானங்களை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனம், 18வது ஆண்டு விழாவை கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடியது. அவ்வப்போது பயணிகளின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை இண்டிகோ அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அதன்படி, பிசினஸ் கிளாஸ் உடன் கூடிய இண்டிகோவின் முதல் விமானம் இன்று டெல்லியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ, பிசினஸ் கிளாஸ் அனுபவம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் இருந்து மும்பைக்கு பிசினஸ் கிளாஸில் பயணம் செய்ய ரூ.18,018 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva