1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hyderabad last nijam dead

ஐதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்: நாளை இறுதிச்சடங்கு!

nijam
ஐதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்: நாளை இறுதிச்சடங்கு!
ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணமடைந்ததை அடுத்து அவரது இறுதி சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
துருக்கியில் வசித்து வந்த ஐதராபாத்தின் கடைசி நிஜாம் முக்காராம் ஜா என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். 80 வயதான அவரது உடல் ஹைதராபாத்துக்கு நாளை கொண்டுவரப்பட இருப்பதாகவும் நாளை மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
ஐதராபாத் கடைசி நிஜாமின் மறைவிற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். முக்காராம் ஜா ஏழைகளுக்கு கல்வி மருத்துவம் உள்ளிட்ட பல சமூக சேவை செய்ததாகவும் அவருக்கு அரசு மரியாதை உடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கடந்த 1933 ஆம் ஆண்டு பிறந்த முக்காராம் ஜா அவர்களுக்கு நான்கு மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளனர்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.. நீங்க யாரு? – டெல்லியில் கவர்னர் – முதல்வர் மோதல்!