செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: புதன், 18 ஜனவரி 2023 (07:59 IST)

3வது மாடியில் இருந்து விழுந்த ஸ்விக்கி ஊழியர் பரிதாப பலி.. நாயால் நேர்ந்த விபரீதம்

Swiggy
ஸ்விக்கி ஊழியர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு வீடு ஒன்றுக்கு உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி ஊழியர் சென்றார் 
 
அப்போது அந்த வீட்டில் இருந்த நாய் அவரை கடிக்க வந்ததால் அவர் பதறி அடித்து ஓடியதாகவும் அப்போது கால் இடறி மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே உயிர் இழந்தார் என கூறப்படுகிறது.
 
 23 வயதான இளைஞர் மூன்றாவது மாடியில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva