Daily Horoscope
✕

இது ஒன்னும் புதுசுல்லயே!.. தனுஷ் அரசியலுக்கு வருவது பற்றி திருமா கருத்து!...

Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2026 (19:29 IST)
நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் பின்னாளில் அரசியலுக்கு வருவார்கள் என கணிக்கப்படுகிறது. இதில், தனுஷ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரின் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. 2028ம் ஆண்டு அரசியல் கட்சி அறிவித்து 2031 சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சியினர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் ‘தனுஷுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களின் யூகங்களாகத்தான் இருக்கிறது. அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, அதன் மீது கருத்து சொல்ல முடியாது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல.. நடிகர் விஜய்தான் முதன் முதலில் இதை தொடங்கி வைத்தார் எனவும் சொல்ல முடியாது.. திரைப்பட கலைஞர்களுக்கு அல்லது கலை உலக தொடர்பு என்பது அரசியலில் தீவிரமாக இருக்கிறது.. எனவே திரைத்துறையிலிருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதை புதிய வரவு என பார்க்க முடியாது’ என தெரிவித்திருக்கிறார்..
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!

வெளிநாடு செல்ல முயன்ற வீரமணி மகள் தடுத்து நிறுத்தம்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!..

தமிழக அரசு கல்லூரிகளில் ரோபோக்கள் லேப்... மாணவர்களுக்கு இனி சர்வதேச வேலை உறுதி -

அடுத்த கட்டுரையில்
Show comments