திமுகவுக்கு எதிராக போரட்டங்கள் வேண்டாம்!. திருமாவளவன் கோரிக்கை....

புதன், 27 மே 2026 (12:03 IST)
தவெக ஆட்சியமைக்க 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களின் ஆதரவை கொடுத்தது. அதோடு தவெகவின் அமைச்சரவையிலும் விசிக இடம் பெற்றிருக்கிறது. விசிக எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக ஆ.ராசா சமூகவலைத்தளங்களில் இட்ட பதிவு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆ.ராசாவின் பதிவு விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அப்போது திமுகவினரும் போராட்டம் நடத்தினர். அங்கு, போலீசார் குவிக்க பட்டிருந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கபட்ட நிலையில் போராட்டம் மோதலாக மாறியது. அதன்பின் ஒருவழியாக போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ‘ஆ.ராசாவை எதிர்த்து விமர்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்வதோ அல்லது போராட்டங்கள் நடத்துவதோ தேவையற்றது.. பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்.. இயக்கத் தோழர்கள் இதனை கடந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.. கட்சியின் மறு கட்டப்பை பணியில் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.<>

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments