ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:47 IST)

அரசுப்பேருந்துகளில் மீண்டும் ஓரம் கட்டப்பட்டு வரும் திருக்குறள் ?

bus
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், அனைத்துப் பேருந்துகளிலும் திருக்குள் இடம்பெற்றது. எனவே, அடுத்தடுத்து ஆட்சி மாறினாலும், இது அனைத்துப் பேருந்துகளிலும் மக்களின் வாழ்க்கையை நெறியைக்கட்டமைப்பதாக குறள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது அரசுப் பேருந்துகளில் திருக்குறள் ஓரம் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துகளில் திருக்குறள் தான் புத்தம் புதிய லெட்டரில் அமைந்திருக்கும், நாளடைவில் எப்.சி க்கு செல்லும் பேருந்துகளில் டிரைவர் சீட்டிற்கு பின்புறம் இருந்த திருக்குறள் காணாமல் போய், எதோ ஒரு ஒரத்தில் எழுதப்பட்டு ஒட்டப்பட்டு இருக்கும். கரூர் மாநகரிலும், மாவட்டத்திலும் பயணிக்கும் பேருந்துகளில் தற்போது திருக்குறள் எதோ ஒரு கடமைக்கு வைக்கப்படுவதாக கருதி ஓரத்தில் வைக்கப்படுகின்றது.

Edited by Sinoj