வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:06 IST)

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்து துறை அமைச்சர் பதில்!

ss siva shankar stalin
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயருமா என்ற கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பதிலளித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில்  பேருந்து கட்டணம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழகத்திலும் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் இது ஒரு கேள்வி ஒன்றுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார் 
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் கட்டண உயர்வு இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்
 
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பேருந்து கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று தகவல் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது