திமுக வினரின்தோல்வி பயமே இதற்கு காரணம் -அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பேச்சு

aravakuruchi
anandakumar| Last Modified புதன், 3 மார்ச் 2021 (23:26 IST)

கரூர் மாவட்ட அளவில் பின் தங்கிய மற்றும் மிகவும் பின் தங்கிய மக்களை தாக்கி வருவது திமுக வினரின் வாடிக்கையாகி விட்டது தோல்வி பயமே இதற்கு காரணம் என்றும், கரூர் அருகே பொதுநல ஆர்வலர் மற்றும் பா.ஜ.க பிரமுகரை தாக்க வந்த திமுக வினர் மீது காவல்நிலையத்தில் புகார் பரபரப்பு.

ஆட்சியில் இல்லாத போதே தாக்க வருபவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் அவ்வளவு தான் புலம்பும் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் பேச்சு

வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஆங்காங்கே பிரச்சாரங்கள் முழுமையாக பல்வேறு கட்சி சார்பிலும் கூட்டணி கட்சிகள் சார்பிலும் நடைபெற்று வரும் நிலையில்., கரூர் அருகே மிகவும் பின் தங்கிய மக்களை திமுக கட்சியினரும், திமுக கட்சி நிர்வாகிகளையும் தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி சார்பில் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட தளவாப்பாளையம் கிழக்கு பகுதியில் வசிப்பர் அன்பரசு, இவர் இப்பகுதியினை சார்ந்த மக்கள் மட்டுமில்லாமல், இந்த ஊர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு சமூக நலம் சார்ந்த மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு போராடி வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடகா சிங்கம் என்றழைக்கப்பட்ட அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள் கண்டு அவர் இணைந்த பா.ஜ.க கட்சியில் இவரும் இணைந்துள்ளார். தற்போது அதே பகுதியில் உள்ள
ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் இவர் பொதுப்பிரச்சினைகளை கையில் எடுத்து வந்து பேரூராட்சிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன என்றும், அவற்றை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். பாதை பிரச்சினைக்கும், குப்பைகள் கொட்டுவதும், அந்த குப்பைகள் தேங்குவதும் தொடர்ந்து நடந்துள்ளது. இதை தட்டி கேட்டுள்ளார். அதற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி என்றும், நாங்கள் தற்போது எதிர்கட்சியாக இருக்கின்றோம், ஆட்சிக்கு வந்தால் உன்னையும் சரி, உன் கட்சியையும் சேர்த்து முடித்து விடுவோம் அடக்கி வாசி என்று கொலை மிரட்டல் விட்டுள்ளார். இந்நிலையில் கொலைமிரட்டலுக்கு ஆளான அன்பரசு கரூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் அவர்களிடம் புகார் தெரிவித்த நிலையில், உடனே பா.ஜ.க நிர்வாகிகள் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திக், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் எஸ்.நல்லசிவம், ஒன்றிய இளைஞரணி தலைவர் சங்கர், ஒன்றிய துணை தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, புகார்களை பெற்றதுடன், உடனே சம்பந்தப்பட்ட வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் புகாரினை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவம் ஒரு பகுதியில் மட்டுமல்ல, கரூர் மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் நடந்து வருவதாகவும், குறிப்பாக பின் தங்கிய மற்றும் மிகவும் பின் தங்கிய மக்களை மட்டுமே திமுக வினர் குறி வைத்து மிரட்டுவதாகவும், இந்த போக்கு நீடிப்பது தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று பகல் கனவு காண்பதாகவும் ஒன்றிய பா.ஜ.க பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

பேட்டி : அன்பரசு – பொதுநல ஆர்வலர் மற்றும் பா.ஜ.க உறுப்பினர் (பாதிக்கப்பட்டவர்)

விஜய் ஆனந்த் – சம்பவம் அறிந்து உடனே வந்து புகார் கொடுக்க உதவிய பா.ஜ.க மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் – கரூர் மேற்கு ஒன்றியம்
இதில் மேலும் படிக்கவும் :