செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (22:17 IST)

இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டி – அர்ஜூன் சம்பத்

வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள்து.

இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகி அர்ஜூன் சம்பத் கூறியுள்ளதாவது:

இந்துக்களை சட்டரீதியான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க வேண்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

இதற்காக 234 தொகுதிகளில் இருந்தும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது அதிமுக – பாஜக கூட்டணியில் 5 இடங்களை ஒதுக்க கோரியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.