சசிகலாவின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்: டிடிவி தினகரன்

dinakaran
சசிகலாவின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்: டிடிவி தினகரன்
siva| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (22:14 IST)
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா சற்றுமுன் அறிக்கை வெளியிட்ட நிலையில் அவருடைய முடிவுக்கு இதுதான் காரணம் என டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
அரசியலை விட்டு சசிகலா ஒதுங்குவது எனக்கு சோகமாக உள்ளது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கலாம் என்றும் தான் ஒதுங்கி இருந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று அவர் நினைத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்

மேலும் அரசியலில் இருந்து ஒதுங்குவதால் உடனே அவருக்கு பின்னடைவு என்று கூற முடியாது என்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் சசிகலா தனது கருத்தை கூறியுள்ளார் என்றும் சட்டப் போராட்டம் மூலம் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :