நாங்கள் இல்லையென்றால் அதிமுகவே இல்லை: எல்.கே.சுதீஷ் பேச்சால் முறிந்த கூட்டணி!

sudheesh
நாங்கள் இல்லையென்றால் அதிமுகவே இல்லை
siva| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (20:49 IST)
நாங்கள் இல்லை என்றால் அதிமுகவே இல்லை என்றும் கூட்டணிக்காக நாங்கள் அதிமுகவை தேடி செல்லவில்லை என்றும் அதிமுக தான் எங்களை தேடி வந்துள்ளது என்றும் எல்.கே.சுதீஷ் பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிகவை ஆரம்பம் முதல் அதிமுக தலைமை கண்டுகொள்ளவே இல்லை. இதனை அடுத்து சமீபத்தில் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் திடீரென தேமுதிக அழைப்பை ஏற்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்துவிட்டது

இந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் எல்.கே.சுதீஷ் திடீரென ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்றால் அதிமுக என்ற கட்சியே இன்று இருந்திருக்காது என்றும் அதிமுக கூட்டணியை நாங்கள் அழைக்கவில்லை என்றும் அதிமுக தான் நம்மை அழைத்து உள்ளது என்றும் பேசியுள்ளார்
இந்த அளவு பேசியதற்கு பின்னரும் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :