இரண்டு சதவிகிதம் மட்டுமே வித்தியாசம்: ஆட்சியை பிடிப்பதில் அதிமுக-திமுக இழுபறி!

stalin
இரண்டு சதவிகிதம் மட்டுமே வித்தியாசம்
siva| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (21:00 IST)
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகள் தேர்தலை சந்திக்க விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்துவருகின்றன

இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பல்வேறு ஆச்சரியத்தை அளித்து உள்ளன. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என 48 சதவீத வாக்குகளும், அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என 46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தனியார் நிறுவன கருத்துக் கணிப்பு ஒன்று தகவல்கள் வெளிவந்துள்ளன

அதேபோல் உங்களின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு 47% பேர்கள் முக ஸ்டாலின் என்றும், 42% பேர் எடப்பாடி பழனிசாமி என்றும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதிமுக-திமுக இடையே மிகக் குறைந்த சதவீத வித்தியாசம் இருப்பதால் எந்த கட்சி ஆட்சியை பிடிப்பது என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக திமுக தவிர மற்ற எந்த கட்சிக்கும் வாய்ப்பில்லை என்பதும் இந்த கருத்துக் கணிப்பில் இருந்து தெரிய வருகிறதுஇதில் மேலும் படிக்கவும் :