மோடி மீது எடப்பாடிக்கு எவ்வளவு பயம்! - கலாய்த்த தங்கதமிழ்ச்செல்வன்

Updated: புதன், 4 ஏப்ரல் 2018 (15:25 IST)
உண்ணாவிரத மேடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்ச்சாமி, பாஜகவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமையாத விவகாரத்தில் திமுகவை மட்டுமே குறை கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பற்றி அவர் எதுவும் விமர்சிக்கவில்லை.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ “அந்த மேடையில் எடப்பாடி பேசியதை பார்க்கும் போது அவர் மோடிக்கு எவ்வளவு பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில், அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்தாரே தவிர பாஜகவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என அவர் தெரிவித்தார்.
 

எல்லாம் காட்டு

நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்: பிரதமர் மோடி

இன்னொரு அதிமுக விக்கெட் விழுந்தது.. சிங்கை ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

இனி பிளிகார்டில் சாப்பாடும் கிடைக்கும்.. தனி செயலி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்...!

நண்பர்கள் கிண்டல்!.. 10 லட்சம் செலவு பண்ணி தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர்!...

Swiggy, Zomato மூலம் வரும் இலவச உணவுகள்!.. டெல்லி போராட்டத்தில் மனித நேயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments