1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (13:17 IST)

காவிரி விவகாரம் : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிடில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 
பல வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில்,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அதற்கு 6 வாரம் கெடு விதித்தது. அந்த கெடு இன்றோடு முடிவடைகிறது. ஆனால், மத்திய அரசில் இருந்து ஒரு துரும்பை கூட தூக்கிப் போட வில்லை. 
 
இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த அதிமுக ஆட்சியாளர்கள் இப்போதுதான் இதுபற்றி பேசவே தொடங்கியுள்ளனர். பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர ஆந்திர அரசு முடிவெடுத்த போது, அதிமுக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை காரணம் காட்டி பல நாட்களாக சபையை முடக்கி வருவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் எனப்பேசியுள்ளார். 

 
அந்நிலையில், தற்போதைக்கு இதை தள்ளிப்போடுவதற்காக, உச்ச நீதிமன்றம் கூறிய ‘திட்டம்’ என்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, வருகின்ற சனிக்கிழமை மத்திய அரசு சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் விளக்கத்திற்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. மேலும், கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரைக்கும் இந்த விவகாரத்தை தள்ளிப்போடவே மத்திய அரசு விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது. 
 
அந்த கூட்டத்தில், வருகின்ற சனிக்கிழமை வரை பொறுத்திருப்பது எனவும், அதன் பின்பு என்ன செய்வது முடிவெடுக்கலாம் என முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. ஆனால், அதிமுக தரப்பில் இதுவரை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.