புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:26 IST)

தமிழகத்துக்கு மழையே வராதா? – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்துக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் மழைப்பொழிவு குறைவாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்றால் வட மேற்கு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நீராதாரத்திற்கு வடகிழக்கு பருவ மழை முக்கியமான ஒன்று. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வந்தாலும், இன்னும் சராசரி அளவை தொடவில்லை.

எதிர்வரும் மாதங்களில் பருவ மழை தீவிரமடையலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலில் இந்த பருவ மழையின்போது வடமாநிலங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மழை பொழிந்தாலும் அது சராசரி அளவிற்கு நிகராக இருக்குமா என குறிப்பிட முடியாது என்றும், அதே சமயம் வட கிழக்கு மாநிலங்களான மிசோரம், மேகாலயா, பீகார் பகுதிகளில் அதீத மழை இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.