செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (20:06 IST)

சென்னையில் மீன் விலை வீழ்ச்சி! – அசைவ பிரியர்கள் குஷியோ குஷி!

புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் மீன்கள், கடல் உணவு வகைகள் மற்றும் இறைச்சிகளின் விலை குறைந்துள்ளன. இதனால் புரட்டாசி மாதத்திலும் அசைவம் சாப்பிடும் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் புரட்டாசி விரதம் என்பது பல்வேறு மக்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். புரட்டாசி மாதம் முழுவது அசைவம் எதுவும் சாப்பிட மாட்டார்கள். இதனால் மீன்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. புரட்டாசி விரதம் கடைப்பிடிக்காத அசைவ பிரியர்களுக்கு இது மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் 500 ரூபாய்க்கு விலை குறைந்துள்ளது. அதேபோல மற்ற மீன் வகைகளான சங்கரா, வௌவால் மற்றும் சுறா மீன்களும் கிலோ 200 முதல் 300 வரை விற்பனையாகி வருகின்றன.

கிலோ 500 க்கு விற்கப்பட்டு வந்த நண்டு மற்றும் இறால் தற்போது 200 ரூபாய் முதல் 250 வரை விற்பனையாகி வருகின்றன.

மீன்களின் விலௌ குறைந்தது போலவே கோழி மற்றும் ஆட்டிறைச்சியும் விலை குறைந்துள்ளது. மேலும் அசைவ உணவகங்கள் பல இறைச்சி குறைந்த விலையில் கிடைப்பதால் உணவு பொருட்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் குறைவு என்பதால் அவர்களுமே விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.