ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (12:37 IST)

இன்று முதல் வெங்காயம் கிலோ 33 ரூபாய்: எங்கே தெரியுமா?

வெங்காய விலை உயர்வு காரணமாக மக்கள் திண்டாடி வரும் நிலையில் அங்காடிகளில் கிலோ 33 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் பெய்த மழையால் வெங்காய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடைகளில் கிலோ வெங்காயம் 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கூடிய ஆலோசனை கூட்டத்தில் வெங்காய தட்டுப்பாடு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு “வெங்காய தட்டுபாட்டை போக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் 3 நாட்களில் வெங்காய விலை படிப்படியாக பழையபடி குறைந்து விடும்.

தற்போது மக்களின் தேவைக்காக தமிழகத்தில் உள்ள 200 காமதேனு கூட்டுறவு அங்காடிகளிலும் பெரிய வெங்காயம் கிலோ 33 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.