திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (08:09 IST)

மது வாங்க ஆதார் அவசியமா? தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு!

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க தமிழகத்தில் ஆதார் கார்டு கேட்கக் கூடாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மது வாங்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என்றும் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் மதுக்கடையில் உள்ள நிபந்தனை குறித்து தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில் ‘குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வயதினர் மது வாங்க வேண்டும் என்ற நிபந்தனையால் அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. வரிசையில் நிற்கும் பலரும் ஆதார் இல்லாமல் மது வாங்க முடியாமல் செல்லும் நிலை உள்ளது. ஆகவே, மது வாங்க ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும் என்னும் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விட் டாஸ்மாக் விற்பனைகளில் அதிகமாக கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.