வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:46 IST)

இந்த மாதத்தின் கடைசி மெகா தடுப்பூசி முகாம்! – மக்கள் கூடும் இடங்களில் அமைக்க திட்டம்?

தமிழகத்தில் வாரம்தோறும் நடந்து வரும் மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் 30ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒன்ரறை மாதத்திற்கும் மேலாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் இப்போதே பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 30ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.