செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:33 IST)

இன்று பாகிஸ்தான் vs நியுசிலாந்து போட்டி… பாகிஸ்தான் ஜெயிக்க இந்திய ரசிகர்கள் ஆசை!

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று உலகக்கோப்பை டி 20 தொடரில் மோதுகின்றன.

இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இன்று மற்றொரு பலமான அணியான நியுசிலாந்துடன் மோதுகின்றது. இந்த போட்டி இந்திய அணிக்கும் மிக முக்கியமானது என்பதால் இந்திய ரசிகர்களும் ஆர்வமாக காண உள்ளனர்.

ஏனென்றால் இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறுவது எளிது. ஒருவேளை நியுசிலாந்து அணி பாகிஸ்தானை வெற்றி பெற்று விட்டால், இந்தியாவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் இந்திய ரசிகர்கள் இன்றைய போட்டியை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்குகின்றனர்.