திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:25 IST)

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றியாச்சா? ரிப்போர்ட் கார்டு எங்கே? – கமல்ஹாசன் அறிக்கை!

திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எந்தளவு நிறைவேற்றியுள்ளது என்ற மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்க வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த மே மாதம் வென்று திமுக ஆட்சியை பிடித்த நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முன்னதாக தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்த திமுக தற்போது அவற்றை மெல்ல நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் அமைச்சகம் அமைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வரும் நவம்பர் 1ம் தேதியன்று இதுவரை நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்த ரிப்போர்ட் கார்டை அரசு வெளியிட வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.