காந்தி கனவு நனவாக ரஜினிக்கு கை கொடுப்போம்! – காந்தியை வைத்து கோல் போடும் தமிழருவி மணியன்

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:07 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காந்தி பிறந்தநாளில் ரஜினிக்கு துணை நிற்க வேண்டுமென தமிழருவு மணியன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவுதினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழருவி மணியன் வெளியிட்டு அறிக்கையில் “காந்தி பிறந்த நாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினியின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக நிற்போம்” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :