திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (11:10 IST)

எப்படா கேப் கிடைக்கும்னு இருக்காங்க; கம்முனு இருங்க! – வார்னிங் குடுத்த ஜெயக்குமார்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமைதி காக்குமாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரிடமும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர்” என கூறியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அதிமுகவில் பிரச்சினை எப்போது வரும் என எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவினர் அதற்கு இடம் தரக்கூடாது” என்று கூறியுள்ளார்.