10 ஆண்டுகளைக் கடந்த எந்திரன் திரைப்படம்… இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!

Last Modified வியாழன், 1 அக்டோபர் 2020 (11:58 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

தமிழ் சினிமாவின் அரும்பெரும் சாதனைகளில் ஒன்றாக மிகப்பெரிய வணிக வெற்றி பெற்ற திரைப்படமாக எந்திரன் இன்றும் இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கி
இருந்தார். இந்த திரைப்படம் ஏற்கனவே கமல் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்து பிரம்மாண்டம் காரணமாக பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 1, 2010 அன்று ரிலீஸான இந்த திரைப்படம் அதுவரை தமிழ் சினிமா நிகழ்த்திய அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது. 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் ரஜினி மற்றும் அக்‌ஷய்குமாரை வைத்து பிரம்மாண்டமாக எடுத்தார். ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றியடையவில்லை.

இந்நிலையில் முதல் பாகத்தின் 10 ஆம் ஆண்டு விழாவை ரஜினி மற்றும் ஷங்கர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :