திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:09 IST)

சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!

pink bus
சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
சென்னையில் பிங்க் நிற பேருந்துகள் மீது மாணவர்கள் கல்வீசி தாக்குதல் ஏற்படுத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சிறப்புக் பேருந்துகளுக்கு பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிராட்வேயில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர்
 
அப்போது அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்ததால் டிரைவர்மற்றும் கண்டக்டர் அவர்களை தட்டிக் கேட்டனர் இந்த நிலையில் இந்த பேருந்து தேவி தியேட்டர் அருகே வந்தபோது கீழே இறங்கிய மாணவர்கள் பேருந்தை கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
 
அதிர்ஷ்டவசமாக இந்த கல்வீச்சு தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்