திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (10:19 IST)

ஒரு கோடி மாணவர்கள் பாடிய தேசியகீதம்! – ராஜஸ்தான் சாதனை!

Rajasthan
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ராஜஸ்தான் பள்ளி மாணவர்கள் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் 75வது சுதந்திரதின விழா ஆகஸ்டு 15ம் தேதியன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் தேசியக் கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து ஒன்றாக 25 நிமிடங்களுக்கு வந்தே மாதரம், சாரே ஜஹான் சே அச்சா மற்றும் தேசிய கீதம் உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளனர் இது லண்டனின் புகழ்பெற்ற வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனையை செய்த மாணவர்களை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்தியுள்ளார்.