1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:36 IST)

கிளாஸ் ரூமில் கட்டிக்கொண்டு நெருக்கம்… வைரல் வீடியோவால் சர்ச்சை!

வகுப்பறையில் தகாத செயலில் ஈடுபட்டதால் 7 மாணவர்களை அசாமில் உள்ள கல்லூரி ஒன்று தண்டித்துள்ளது.


வகுப்பறையில், கல்லூரியின் 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் குழு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்ததுள்ளனர். இதை அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

தனியார் நிர்வகிக்கும் நிறுவனமான சில்சாரின் ராமானுஜ் குப்தா கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து மாணவர்களின் நடத்தையை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்தையும் சிலர் விமர்சித்துள்ளனர்.

இதனையடுத்து ஏழு மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏழு பேரில் நான்கு பேர் பெண்கள், மூன்று பேர் ஆண்கள். இது குறித்து கல்லூரி முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், ஆசிரியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர்கள் இவ்வாறு ந்டந்துக்கொண்டுள்ளனர். கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. மேலும் வளாகத்தில் மொபைல் போன்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் 15 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அந்த ஏழு மாணவர்களின் பெட்றோரை கல்லூரி நிர்வாகம்அழைத்துள்ளது. கல்லூரி இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது மாணவர்களை வெளியேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.