புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (11:14 IST)

ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறங்கள்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள முழு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஸ்டெர்லட் ஆலை நிறைவேற்றி பின்னர் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.