ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஹேமந்த் சோழன் முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், அவர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஹேமந்த் சோரன் மீது புகார் எழுந்தது. இது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்த நிலையில், ஜாமீனில் வெளிவந்து தான் மீண்டும் அவர் முதலமைச்சராக பணியாற்றினார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதன் பின்னர், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்து வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவால் அவர் முதல்வர் பதவி ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.
Edited by Siva