செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (08:18 IST)

செம மொக்க வாங்கிய தமிழிசை: அட்ராசிட்டியில் இறங்கிய ஜெ.தீபா

தூத்துக்கிடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜெ.தீபா பேரவையினர் தமிழிசை உருவ போஸ்டரில் அவரது வாயை ஊசியை வைத்து தைத்தனர்.
ஜெ.வின் மறைவிற்கு பின் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய ஜெ.வின் அண்னன் மகள் தீபா, அதற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என பெயர் வைத்தார். தொடக்கத்தில் பரபரப்பாக வலம் வந்த தீபா அதன்பின் அமைதியாகிப் போனார். 
 
இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என வந்த தீர்ப்பிற்கு எதிராக ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் போராளிகள் முட்டாள்கள் என கூறிய பாஜக மாநில தலைவர் தமிழிசையின் உருவ போஸ்டரில் அவரது வாயை ஊசியை வைத்து தைத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்த வீடியோவானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.