வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (08:48 IST)

ஆன்லைன் மருந்து விற்பனை – தமிழகத்தில் இல்லை தடை

ஆன்லைன் மருந்து வர்த்தகம் மூலம் போலியான மற்றும் காலாவதியான மருந்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக ஆன்லைன் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கோரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தன.

தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்கள் போலியான மற்றும் காலாவதியான மருந்துகளை மக்களிடம் விற்கின்றனர். இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கபடுகின்றனர். எனவே ஆன்லைன் மருந்து வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தது.

இதனை ஏற்று விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விதிகளை ஜனவர் 31 ஆம் தேதிக்குள் வரையறுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். அதுவரை தமிழகத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யவேண்டும் என அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகளை நேற்று (டிசம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அதில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பாக ’ ஆன்லைன் மருந்து விற்பனை ஒழுங்குமுறை சார்பாக மத்திய அரசே விதிமுறைகளை வகுக்க இருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பலக் கம்பெனிகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.’ என வாதாடினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை மீதான இந்த மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனையைத் தொடர்ந்து நடத்தலாம் என அறிவித்துள்ளனர். எனவே இன்று முதல் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் மருந்துகள் விற்கப்படும் எனத் தெரிகிறது.