புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (18:42 IST)

பாலியல் புகார் ஐஜிக்கு சலாம் போடும் முதல்வர்: ஸ்டாலின் காட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் பாலியல் புகாரில் சிக்கிய ஐஜி முருகன் மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வரும் அமைச்சர்களும் அவருக்கு சல்யூட் அடித்து வருகின்றனர் என காட்டமாக விமர்சித்துள்ளார். 
 
பணியாற்றும் அலுவலகத்திலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் எஸ்பி கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
பதிலாக புகாருக்குள்ளான ஐஜி முருகன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அந்த அதிகாரியை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 
 
புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு ஆகியும் பிரதி உபகாரம் செய்திடும் வகையில், பாதுகாக்கும் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் ஆட்சி செய்வது, ஒட்டுமொத்த பெண்ணினத்தின், கண்ணியத்திற்கும் பேராபத்தாக மாறியிருக்கிறது.
 
இதன்மூலம், பாலியல் புகாரிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம்; எங்களை ஊழல் புகார்களில் இருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று, ஒப்பந்தம் போட்டு, அந்த ஐ.ஜிக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சல்யூட் அடித்து நிற்பது அவமானம் என தெரிவித்துள்ளார்.