1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (11:46 IST)

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்திருந்தால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார்.
 
அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும், உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட முன்வடிவு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
மேலும் அரசு பள்ளி மாணவர்கள், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு நீதிபதி தலைமையிலான ஆணையம் அறிக்கை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு காரணமாக அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,