ஜெய் கொரோனா என்று கோஷமிட்ட ஐஐடி மாணவர்கள்: டெல்லியில் பரபரப்பு

ஜெய் கொரோனா என்று கோஷமிட்ட ஐஐடி மாணவர்கள்
Last Updated: திங்கள், 16 மார்ச் 2020 (06:51 IST)
ஜெய் கொரோனா என்று கோஷமிட்ட ஐஐடி மாணவர்கள்
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் நுழைந்து தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த போதிலும் இந்த வைரஸ் தற்போது 100 இந்தியர்களை தாக்கி உள்ளது என்பதும் இரண்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள் பல மூடப்பட்டு வருகின்றன. பல்கலைக் கழக தேர்வுகள் உள்பட பல தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லி ஐஐடி வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்டது இந்த அறிவிப்பை அடுத்து டெல்லி ஐஐடியின் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவர்கள் சந்தோசத்தில் ’ஜெய் கொரோனா’ என கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
எப்ரல் ஒன்றாம் தேதி முதல் டெல்லி ஐஐடி செயல்படும் என்றும் இருப்பினும் ஏப்ரல் மாதம் கொர்ன்னா வைரசின் நிலை குறித்து ஆய்வு செய்த பின்னர் கல்லூரி தொடங்குவது குறித்து உறுதி செய்யப்படும் என்றும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :