வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 17 மார்ச் 2020 (15:31 IST)

மலேசியாவில் 200 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தவிப்பு ...

மலேசியாவில் 200 மேற்பட்ட இந்திய மாணவர்கள் தவிப்பு ...

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மத்திய தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் மாநிலத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள்,பார், டாஸ்மாக், வணிக வளாகங்கள், மத வழிபாடு கூடுகை இடங்கள், நிச்சல் பயிற்சி,உடற்பயிற்சி நிலையம் ,ஆகிய இடங்களில் மக்கள் கூட வேண்டாம் . பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் எனவும்  நேற்று மத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகிறது. 
 
இதில், கொரோனா பாதிப்பால் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் மாணவிகளும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
 
குறிப்பாக மணிலாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏராளமான மாணவர்கள் இந்தியா திரும்புவதற்காக இன்னும் காத்திருக்கின்றனர்.
 
பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் விமானங்கள் தாமதத்தாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் உள்ளனர்.
 
பிலிப்பைன்ஸில் இருந்து மூன்று விமானங்கள் மலேசியாவில் தரையிரங்கியுள்ளது. அங்கிருந்து மாணவர்கள் தாயகம் திரும்பவில்லை.