திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 19 மார்ச் 2020 (10:34 IST)

அவினாசியில் அகோர விபத்து: டிரிப் சென்ற மாணவர்கள் ஸ்பாட் டெத்!!

காரில் சுற்றுலா சென்ற மாணவர்கள், அவினாசி அருகே ஏற்பட்ட விபத்தில் பலியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள். ஓட்டுனர் உட்பட சுமார் 8 பேர் அந்த காரில் பயணித்துள்ளனர். 
 
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் மாவட்டம் பழங்கரை அருகே கார் சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராமல் முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 மாணவர்கள் மட்டும் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
 
காயங்களுடன் மீட்கப்பட்ட மீதமிருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.