1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (07:57 IST)

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க செயலி: தாமதம் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை!

app
பள்ளிகளில் காலையில் வழங்கும் உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காலை உணவு வழங்க தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். மதுரையில் உள்ள அரசு பள்ளியில் அவரே நேரடியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினார் 
 
இந்த நிலையில் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்த படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
 
முதலமைச்சரே இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் என்றும் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்