80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!
ஜார்கண்ட் மாநிலத்தில் 80 மாணவிகளையும் சட்டைகள் அவிழ்த்து அப்படியே அந்த மாணவிகளை வீட்டுக்கு தலைமை ஆசிரியர் அனுப்பியதாகவும், இதனை அடுத்து பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் திக்வாடி என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிந்த பின்னர் மகிழ்ச்சியில் மாணவிகள் தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினார்கள்.
இதனை பார்த்த தலைமை ஆசிரியர், அவர்களை கண்டித்து மாணவிகளின் வாசகங்கள் எழுதிய சட்டையை கழற்றுமாறு உத்தரவிட்டார். சட்டை இல்லாமல் அப்படியே வீட்டுக்கு செல்லுமாறு அவர் கூறியதை அடுத்து, மாணவிகள் தங்கள் மேல் சட்டை இன்றி வீடுகளுக்கு சென்றனர்.
இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கையை விடப்பட்டது.
அந்த கோரிக்கை ஏற்கப்படாததால், பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva