செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:52 IST)

பாஜகவில் இணையும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர்!

punjab
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமரிந்தர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த நிலையில் அவர் திடீரென விலக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்
 
இந்த நிலையில் தனிக் கட்சியை நடத்த முடியாமல் திணறி வரும் அமரிந்தர் சிங் தற்போது பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டெல்லியில் வரும் 19ஆம் தேதி தனது பஞ்சாப் லோக்தளம் கட்சியை பாஜக உடன் இணைக்கிறார் என்று கூறப்படுகிறது 
 
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் மற்றும் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பாஜகவில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது