ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (08:04 IST)

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி: முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்ற வகையில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
விருதுநகர் அருகே திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இந்த விழா அமையும் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் டெல்லியில் யாரை அமரவைத்து என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் பேசினார்
 
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் தமிழகம் தான் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உள்ளது என்றும் பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும் அவர் தெரிவித்தார் 
 
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி உரிமையை பாதிக்கிறது என்றும் தமிழக ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி அமைக்க பார்க்கிறார்கள் என்றும் அதை தடுப்பதற்கு நாம் 40க்கு 40 இல் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாற்பதும் நமதே நாளை நமதே என்ற என்ற வாசகத்துடன் ஸ்டாலின் தனது உரையை முடித்துக்கொண்டார்.