செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (17:07 IST)

வலி மாமே வலி.. சளி மாமே சளி..! – ரயில்வே போலீஸின் கொரோனா கானா பாடல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்னக ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் கானா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கொரோனா குறித்த அச்சமின்றி மாஸ்க் அணியாமல் செல்வது, சமூக இடைவெளி பின்பற்றாதது குறித்த புகார்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தென்னிந்திய ரயில்வே சென்னை மண்டலத்தை சேர்ந்த பாதுகாப்பு படை காவலர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “வலி மாமே வலி.. சளி மாமே சளி” என்ற கானா விழிப்புணர்வு பாடலை பாடி, அதற்கு நடனமும் ஆடி தென்னிந்திய ரயில்வே யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.