செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (16:52 IST)

ராட்சசன் ஆசிரியரை விர மோசமானவர்கள் இருக்கிறார்கள்… இயக்குனர் ராம்குமார் டிவிட்!

சமீபத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ள சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை குறித்து இயக்குனர் ராம்குமார் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அந்த பள்ளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் மற்றும் சாதி ரீதியான தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சமுகவலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலனை, ராட்சசன் படத்தில் இடம்பெற்றிருந்த கொடூரமான பாலியல் சிந்தனைகள் கொண்ட ஆசிரியர் இன்பராஜுடன் ஒப்பிட்டு பதிவுகளும் மீம்ஸ்களும் பகிரப்பட்டன. அதையடுத்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் ‘இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கப்படவில்லை என்றும், பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு தான் இன்பராஜ் கதாபாத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்கள்’ எனக் கூறியுள்ளார்.