ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (17:00 IST)

கொரோனாவை வெல்ல பாஸிட்டிவ்வாக இருக்கவேண்டும்… ராஷிமிகாவின் நம்பிக்கை வீடியோ!

நடிகை ராஷ்மிகா மந்தனா கொரோனா இரண்டாவது அலையை வெல்ல நேர்மறையான எண்ணம் வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்போது அவர் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘சாதாரண மனிதர்கள் தமது அக்கம்பக்கத்தினருக்கு உதவி வருகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலை வரும் என்று நாம் நினைக்கவில்லை. இந்த போராட்டத்தில் ஜெயிக்க பாசிட்டிவ் எண்ணத்துடன் எதிர்கொள்வது அவசியம்’ எனப் பேசியுள்ளார்.