வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (09:03 IST)

தமிழிசை மீது வழக்கு தொடர சோபியா திட்டம்: பாஜகவுக்கு நெருக்கடி

விமானத்தில் தமிழிசை முன் 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷம் போட்ட விவகாரத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தெரிந்ததே. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள சோபியா, நேற்று தனது தந்தையுடன் நெல்லையில் மனித உரிமை ஆணையம் முன் ஆஜரானார். இவர்களுடன் வழக்கறிஞர் அதிசயகுமாரும் உடனிருந்தார்

இந்த நிலையில் தமிழிசை கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து சோபியாவை கைது செய்த போலீசார், சோபியா கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகவும் சோபியாவின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

ஏற்கனவே தமிழிசை மீது பாஜக தலைமைக்கு அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டால் அவரது தலைமைக்கு நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது. தமிழிசை பதவி நீக்கப்பட்டால் அந்த இடத்தை பிடிக்க எஸ்.வி.சேகர் தயாராக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.