புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 டிசம்பர் 2024 (17:58 IST)

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஆயிரக்கணக்கான வருடங்கள் கம்பீரமாக நின்ற திருவண்ணாமலையில், நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்து விட்டார் என சித்தர் ஒருவர் கூறி இருப்பதாக வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சித்தர் மேலும் கூறியபோது, ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வெள்ளம் வந்தது, சிவபெருமானின் கோபத்தை தான் காட்டுகிறது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை நான் உற்றுப் பார்த்தபோது, அது நெற்றிக்கண் திறந்து இருப்பது போல் எனக்கு தெரிகிறது. இது நான் கற்பனையில் பேசுவதாக சிலர் நினைக்கலாம். ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்கள் கம்பீரமாக நின்ற மலை இன்று உதிர்ந்து போயிருக்கிறது என்றால், இது மக்களுக்கான எச்சரிக்கை.

மக்கள் தவறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிவபெருமான் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டார். அவர் நெற்றிக்கண்ணை திறந்தது  மக்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்றும், தொடர்ந்து தவறு செய்தால், இன்னும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்துவார் என்றும் அந்த சித்தர் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகமாகி வருகிறது. சந்தனமும் குங்குமமும் இருக்க வேண்டிய நகரில் மது பாட்டில் மிதக்கிறது என்றும் இதையெல்லாம் பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என அந்த வீடியோவில் சித்தர் எச்சரித்துள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Siva