இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?
கேரள மாநிலத்தில் குரங்கு ஒன்று இளைஞரின் செல்போனை திருடி அதில் வந்த அழைப்பை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞர், அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகில் தனது செல்போனை வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு குரங்கு, அந்த செல்போனை தூக்கிக்கொண்டு மரத்தில் ஏறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போனை மீட்க முயற்சி செய்தார். குரங்கின் மீது கற்களை எறிந்தும், பல முயற்சிகளை செய்தும், குரங்கு செல்போனை விட்டுக்கொடுக்காமல், மரத்திற்கு மரம் தாண்டிக் கொண்டே சென்றது.
அப்போது திடீரென, அந்த செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே குரங்கு செல்போன் பட்டனை அழுத்தியதாகவும், அதை காதில் வைத்து பேசியது போல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், ஒரு வழியாக, குரங்கு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவும் போது, தரையில் செல்போன் விழுந்தது. அதை எடுத்துக் கொண்ட இளைஞர் நிம்மதி அடைந்தார். இந்த அசாதாரண சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Edited by Mahendran