வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (19:38 IST)

மோடியின் திட்டத்திற்கு நோபல் வேண்டும்… ‘ட்விட்டரில்’ சிக்ஸ்ர் அடிக்கும் தலைவர்…

நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி  செங்கோட்டையில் மூவர்ண கோடியேற்றி வைத்து உரையாற்றிய மோடி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார்.


இதுபற்றி அவர் பேசியபோது, ’உலகில் உள்ள மிகப் பெரிய திட்டமாக ஆயுஷ்மான் திட்டம் இருக்கும். இதன் மூலம் நாட்டிலுள்ள பத்து கோடி ஏழை குடும்பங்கள் பயனடையும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்போகிறாம். இதன் மூலம் ஐம்பது கோடி மக்கள் மருத்துவ காப்பீட்டு பலன் பெற முடியும் ’என்று குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்வடிவம் பெற்று உள்ளது.

இத்திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் பிரதமர் மோடி நேர்று தொடங்கி வைத்தார்.அப்போது சில பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சுகாதார அட்டைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக பா.ஜா.க தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:


’ஆயுஷ் பாரத திட்டத்தை கொண்டுவந்துள்ள பிரதமர் மோடிக்கு 2019 -ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று அதில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.’